தனியார் பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும். சில பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைகோர்த்துள்ளனர். எனினும், பஸ் உரிமையாளர்கள் இணைந்து கொள்ளவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களில் சில சங்கங்கள் மட்டுமே இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.