தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால், நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம், மேல் மாகாணத் தனியார் பஸ் சாரதிகள் சங்கம், இலங்கைத் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் சங்கம், துறைமுகக் கொள்கலன் வாகனச் சங்கம் மற்றும் கொழும்பு நகர்ப்புற ஓட்டோ சங்கள் ஆகியனவும் இணைந்துள்ளதாக, இன்று காலை அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தனியார் பஸ் ஊழியர்களின் போராட்டத்தால், இன்னல்கள் ஏற்படும் பட்சத்தில், இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பஸ்களை, சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.