கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு மதவாச்சி புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி நாளை 17ம் திகதிமுதல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதிவரை இது அமுலாகும் என்று அந்த திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறியுள்ளார். தலைமன்னார் நோக்கிய புகையிரத வீதியில் இருக்கின்ற மிகப் பெரிய பாலம் ஒன்றின் திருத்தப்பணிகள் காரணமாகவே புகையிரத போக்குவரத்து மதவாச்சி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும் பயணிகள் நலன் கருதி மதவாச்சி புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னார் வரை பஸ்சேவை முனனெடுக்கப்படவுள்ளதாக விஜய சமரசிங்க கூறியுள்ளார்.