வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, இராஜதந்திர விஜயமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இத்தாலி செல்லவுள்ளார்.

இதன் காரணமாக, இம் மாதம் 20 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் ஆளுநராக கடமையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.