லண்டனில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த பெண்ணொருவரின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தின் கிணறொன்றில் இருந்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்து, தனது உறவினர்களுடன் வசித்து வந்த 64 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சாவகச்சேரி காவற்துறையினர் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.