அம்பாறை பொத்துவில் கனகநகர் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படும் நிலமீட்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 180 குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்தபின் முகாம்களில் இருந்து தமது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்ட போதும், பல சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சிகள் முடக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.