யாழ். ஆனைக்கோட்டை அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் இறங்கியுள்ள நிலையில், கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. பின்னர் யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எவ்வாறாயினும், கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.