ரயில் போக்குவரத்துக்கு விரைவில் புதிய ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சேவையில் ஈடுபடும் பல ரயில்களில் தொழில்நுட்பக் கோளாறு காணப்படுவதால், விரைவில் புதிய ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.