Header image alt text

இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த கூட்டு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது தொடர்பிலான சந்திப்பொன்று இருநாட்டு உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பொருளாதார இணக்கப்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க பல முக்கிய உடன்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் 4.7 ஏக்கர் காணி இந்த மாதம் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.

இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருக்கின்றது.

யாழ். ஆனைக்கோட்டை அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் இறங்கியுள்ள நிலையில், கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. Read more

லண்டனில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த பெண்ணொருவரின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தின் கிணறொன்றில் இருந்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்து, தனது உறவினர்களுடன் வசித்து வந்த 64 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா பறநாட்டன்கல் பகுதியில் நேற்று புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் சம்பவ இடத்திலியே உயிரிழந்துள்ளன.

குறித்த விபத்தின் காரணமாக 20நிமிடங்கள் தாமதித்தே புகையிரதம் பயணித்ததாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

‘சந்தேகநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் சில ஆவணங்கள் மன்றில் இன்னும் முன்வைக்கப்படவில்லை. எனவே சந்தேகநபரைப் பிணையில் விடுவிப்பது பொருத்தமற்றது. Read more

யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர் விக்டோறியா வீதியில் வெளி மாவட்டத்தவர்களுக்கென கொடுக்கும் விடுதியிலேயே நேற்று இந்தச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். Read more

கத்தார் நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றவர்களில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேரின் சடலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதிக் கிரியைகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுறவுகள் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் உயிரிழந்த இருவருடைய சடலங்கள் இதுவரையில் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். Read more