யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்கச் சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை மோதலாகியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக் கொண்டிருந்த 54 வயதான தேவராஜா என்பவர் மோதலை தடுக்க சென்றுள்ளார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட குறித்த வயோதிபர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை மோதலில் ஈடுபட்டவர்களில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.