வவுனியா – கோயில்குளம் பகுதியில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கோயில்குளத்தைச் சேர்ந்த க.கதிர்செல்வன் (வயது 30)என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். நேற்றிரவு 12 மணியளவில் தனது அறையினுள் சென்று போர்வையை பயன்படுத்தி குறித்த இளைஞர் இவ்வாறு சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.