புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளமைக்கு அமைய,குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முப்பது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. நியமனங்களைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அமைச்சர் சுவாமிநாதனின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.