யாழ். மானிப்பாயில், இன்றுகாலை 6 கைக்குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே, இக்கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.