யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத சிலர், தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

3 உந்துருளிகளில் சென்றிருந்த 6 பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலைக் கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.