உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்களின் சமய, சமூக கல்விப் பணிகளைப் பாராட்டி ஆணைக்கோட்டை இந்து சமய விருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரட்ணசபாபதி திருமண மண்டபத்தில் (19.08.2018) பிற்பகல் 4மணியளவில் ஆனைக்கோட்டை இந்துசமய விருத்திச் சங்கத் தலைவர் திரு. ஏ.வீ.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கத்தைத் தொடர்ந்து ஆசியுரையினை சிவசிறி க.கிருண்ணேஸ்வரக் குருக்கள் (பிரதமகுரு மூத்தநயினார் தேவஸ்தானம்) நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றதையடுத்து நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வினையடுத்து திரு. மு.சண்முகம் (செயலாளர் -இந்துசமய விருத்திச் சங்கம், ஆனைக்கோட்டை) அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.