சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் கண்காணிப்பு அமைச்சர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.

தெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் நேற்று குழப்பத்தை ஏற்படுத்தியதால் 08 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதன்போது 03 பெண் கைதிகளுக்கும் காயம் ஏற்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் திஷார உபுல்தெனிய கூறினார். இதனையடுத்து குழப்பத்தை தோற்றுவித்த 52 பெண் சிறைக்கைதிகள் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.