ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.

நேற்று இரவு 10.15 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து சந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 126 என்ற விமானத்திலேயே அவரும், 19 பேர் அடங்கிய அவருடைய குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த குழுவினர் நாளை ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளை சந்திக்க உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.