பசுபிக் தீவான நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிச் சிறார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒன்றியம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. குறித்த முகாமில் தடுப்பில் உள்ள 12 வயதான சிறுவன் ஒருவர், ஒருவாரகாலமாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.