கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து பம்பலபிட்டி சந்தியில் அமைந்துள்ள கடையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ வேகமாக பரவிய நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.மேற்படி தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.