யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கலைவாணி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் கலைவாணி முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2018 (19.08.2018) பிற்பகல் 2மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. முத்து தவராசா தலைமையில் நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. பூவிலிங்கம் ராஜ்வினோத் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்), திரு. பரநிரூபசிங்கம் பிரதீபன் (கிராம அலுவலர்), திரு. இரத்தினசிங்கம் அரிகரன் (ஐந்தாம் வட்டார தலைவர்) ஆகியோரும், கௌரவ விருநத்தினர்களாக திரு. வடிவாம்பிகை (உடுவில் முன்பள்ளி இணைப்பாளர்), திரு. சின்னராசா றஜீவா (உதவி முகாமையாளர், இலங்கை ஏற்றுமதி இறக்குமதி கூட்டுத்தாபனம்), வரதன் யகீனா (ஆசிரியர் மன்னார் கற்கிடந்தகுளம் பாடசாலை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதையடுத்து இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், கொடியேற்றம், ஒலிம்பிக் தீபமேற்றல், முன்பள்ளி மாணவர்களின் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து கருமாரி அம்மன் ஆலயக் குருக்கள் ஆசியுரை நிகழ்த்தினார்.

தலைமையுரையினைத் தொடர்ந்து முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

குறிப்பு: இந்நிகழ்வின்போது சுவிஸ்லாந்தில் வசிக்கும் புன்னாலைக்கட்டுவன் மத்தாளோடையைச் சேர்ந்த திரு. கோணேஸ்வரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்திய ஆறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன் இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களின் நிதியுதவியின்கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கான புத்தகப்பைகளும் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.