அனைத்து இனங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் மூன்று மொழிகளையும் கல்வி கற்பதற்கான பாடசாலை ஒன்றை கொழும்பு மாவட்டத்தில் அமைப்பதற்கு யோசனை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

900 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவத்தை பகுதியில் குறித்த தேசிய பாடசாலையை அமைக்க அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதற்கான யோசனை பத்திரங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்துள்ளார்.