53 வருடங்களுக்கு முன்னர் பல இன மக்களின் மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

1985 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதலினால் மூடப்பட்ட இந்த வித்தியாலயத்தின் இவ்வாறான கல்வி நடவடிக்கையின் ஊடாக உண்மையான நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளபழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் இம் மாதம் 26 ஆம் திகதி காலை 8.30 க்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.