அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage கப்பல், இன்று (24), திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில், 900க்கும் அதிகமான அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அடங்குவதாக, தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.