மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்க்கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்று கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் குறித்த இடத்திற்கு வந்த தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோதிலும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.