மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்றுமாலை 6மணியளவில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது. மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, ஐக்கிய தேசிய முன்னணி, சிறீலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.