ரயில் பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையின் காரணமாக, மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, அச் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று, இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.