‘செமட்ட செவண’ திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்வீட்டுத்திட்டம் அமைந்துள்ள இடத்திற்கு முத்துமாரியம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் அமைக்கப்படும் 110 வது வீடமைப்பு திட்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹரூப், கே.துரைரட்ணசிங்கம், அப்துல்லா மஹரூப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன, மூதூர் பிரதேச செயலாளர் எம்.தாஹீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.