காலமான முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறவினர்களிடம் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். காலமான சந்திரா ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.