இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்த கலந்துறையாடல் ஒன்றுக்கு தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் 168 படகுகள் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தீர்மானித்ததையடுத்தே, குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் அதிகாரிகளை சந்தித்து படகுகளின் சேத விவரங்களைக் கணக்கிடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.