பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்துகொள்கின்றன. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரிஸ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.