சபாநாயகரால் நியமிக்கப்படும் பிரதமர் தலைமையிலான குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் கையளிக்குமானால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் மற்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். ஆயினும் குறித்த காலப்பகுதியில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அதற்கான சட்ட திருத்தங்கள் நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு மாகாணசபை கலைக்கப்படுகின்ற ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியில் குறித்த அறிக்கை வழங்கப்படுமாயின், ஆறு மாகாண சபைகளின் தேர்தலையும் ஒன்றாக நடத்த முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.