Header image alt text

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால் சபாநாயகர் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி பாராளுமன்ற குழு நிலைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. எக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது வலியுறுத்தியுள்ளார். Read more

வடக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா முன்வந்துள்ளது. இலங்கையின் வடக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென்பகுதிக்கு மட்டுமல்லாது, வட பகுதி மக்களுக்கும் வீடுகள், மற்றும் வீதி நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்த கலந்துறையாடல் ஒன்றுக்கு தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் 168 படகுகள் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more