அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் குடும்பம் ஒன்று, அங்கு தொடர்ந்தும் வசிப்பதற்கான தமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

நடேசலிங்கம், பிரியா ஆகிய தம்பதியினர் கடந்த 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் படகுமூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், தங்குமிட விசாவை புதுப்பிக்காதமை காரணமாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள், அந்நாட்டு குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய தம்பதியினரும், அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளுமே இந்த நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை அவர்கள் மீண்டும் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த மேன்றையீட்டின் மூலம், தாம் மீண்டும் குயின்ஸ்லாந்துக்கு திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் நம்பிக்கை நம்பியிருப்பதாக தெரியவருகிறது.