இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரிய முதலீட்டாளர்களின் சம்மேளனம் இந்த திட்டங்களில் ஒன்றிணைந்துள்ளது.

வர்த்தக மேம்பாட்டு தரப்பினரை கொண்ட குழு ஒன்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள கொரிய நாட்டு முதலீட்டாளர்களின் வலைப்பின்னல் ஒன்றையும் ஏற்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும். ஷோல் நகரிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் இதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.