கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளங்களில் நீரின்மையால் கால்நடைகள் அல்லற்படுகின்றன. இதேவேளை பச்சிளைப்பள்ளி பகுதியில் குழிகள் வெட்டப்பட்டு அதிலிருந்து பெறப்படும் நீரை கால்நடைகள் அருந்தி வருகின்றன.