யாழ்ப்பாணம் – நெல்லியடி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் குண்டுகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதிகளில் மேற்கொண்ட தோண்டுதல் நடவடிக்கையில் இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.