இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. குறித்த கருத்தரங்கில் சுமார் 800 பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சார்க் நாடுகளின் இராணுவத் தளபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.