அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியமையினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாலிய விக்ரமசூரியவிற்கு பிணை வழங்கிய அவரின் மனைவி மற்றும் சகோதரிக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.