திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வறட்சி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் இன்று மக்கள் குடிப்பற்கும் நீர் இல்லாத நிலையில் துன்பப்பட்டு நிற்கின்றனர். இதனடிப்படையில் இன்று தாண்டியடி கிராம மக்கள் தமக்கு குடிப்பதற்காவது தண்ணீர் வழங்குமாறு கோரி சுலோக அட்டைகளை தாங்கியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இவ் ஆர்ப்பாட்டமானது தாண்டியடி பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டதுடன் தாண்டியடி பிரதான வீதியில் நீர் குடங்களை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

தாண்டியடி, சங்கமன்கிராம, உமிறி, நேருபுரம், தங்கவேலாயுதபுரம், காஞ்சிகுடியாறு காஞ்சிரம்குடா, மண்டானை சாகாமம், குடிநிலம் மற்றும் மணல்சேனை போன்ற கிராமங்களில் வாழும் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பாரிய அவல நிலைமைக்கு ஆளாகியுள்தாகவும்,

தற்போது காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் தாம் துன்பப்படுவதாகவும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்திருந்தனர். இதுபற்றிய மகஜரும் அவர்கள் கையளித்துள்ளனர்.