முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டெம்பர் 11 ஆம் திகதி புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பையேற்று அங்கு செல்லவுள்ள அவர், மூன்று நாள்கள் அங்கு தங்கியிருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இரண்டு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமுக்குச் சென்றுள்ளார். வியட்நாம் – ஹனோய் நகரில் நாளையதினம் வரையில் நடைபெறும் இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், மாநாட்டுக்கு வருகைதரும் பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என்றும் அலரிமாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.