தம்புளை – ஹபரணை பிரதான வீதியில், பிரதேச மக்கள் இன்று காலை முதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன, மத பேதங்களின்றி, பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த,

தம்புள்ளை-ஹபரணை பிரதான வீதியில் அமைந்துள்ள, பழமையான விநாயகர் ஆலயம், மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதனை வர்த்தகர்களுக்கு விற்பனைச் செய்ய எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள குறித்த ஆலயத்தை, மீண்டும் திறக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.