கிளிநொச்சி – ஊரியான் பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. ஊரியான் பகுதியை சேர்ந்த 23வயதான சியாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மண் ஏற்றிக் கொண்டு சென்றவேளை உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இவர் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டதையடுத்து இவரை அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.