ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கட்ஸுயுகி நகானே இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள ரோந்து படகுகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நிகழ்வு நாளையதினம் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான விரிவான பங்களிப்பு மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் வழியமைக்கும் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.