வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவனை காணவில்லையென தெரிவித்து நேற்று இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் ஜெயப்பிரகாஸ் சாம் (வயது 15) என்ற மாணவனை நேற்றுமாலை 5மணிமுதல் முதல் காணவில்லையென தெரிவித்து அவரின் பெற்றோர் நேற்றிரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். குறித்த மாணவன் வீட்டிலிருந்து தனது உடு துணிகள் சிலவற்றை எடுத்துச் சென்றுள்ள தகவலையும் பெற்றோர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.