மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்றுகாலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த தம்பிராசா குணராசா (வயது 47) என்பவர் மாட்டுத் பட்டியடிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.