கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி முறுகண்டியைச் சேர்ந்த 32வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதுபற்றிய தேடுதல்கள் இடம்பெற்றநிலையில் அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஒரு பெண் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டநிலையில் அவர்கள் சடலத்தை அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது.