தென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மீன்பிடி வலைகளை இன்று வழங்கி வைத்தார்.

கடந்த 13ஆம் திகதி இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தென்பகுதி மீனவர்களுக்கும் நாயாறு மீனவர்களுக்கும் முறுகல் நிலை ஒன்று தோன்றியதை தொடர்ந்து நாயாறு பகுதியினை சேர்ந்த தமிழ் மீனவர்களின் எட்டு மீனவ வாடிகள் மற்றும் உடைமைகள் என்பன தீவைத்து அழிக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த நாயாறு பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவ குடும்பங்களை இன்று நேரடியாக பார்வையிட்ட அமைச்சர் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களுக்கும் தலா ஆறு வலைகள் வீதம் வழங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வு நாயாறு பொதுமண்டபத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.