மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய மகசின்கள் ஐந்தும் ஒரு குழியில் பொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்து இருக்கலாம். அப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.