அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட இலங்கையர், 25 வயதானவர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களில் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது, இலத்திரனியல் உபகரணங்கள் சிலவும் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேற்படி குற்றச்சாட்டுகளின் கீழ், இந்த இலங்கையருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அவருக்கு பிணைவழங்குவதற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ், அமைப்புடன் தொடர்புபட்டவரென சந்தேகிக்கப்படும் மேற்படி சந்தேநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.