Header image alt text

இன்று 01.09.2018 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில், நெடுந்தூரம் நடந்துவந்து கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்ட 15 மாணவர்களுக்குமான துவிச்சக்கரவண்டிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால், தமது கட்சியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக வழங்கிவைக்கப்பட்டது.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான முழுமையான நிதியையும் வழங்கியிருந்தார். Read more

வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்கள் தனது 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.08.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 40 நபர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.

2,38,000 ரூபா பெறுமதியான 9 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், 39,0000 ரூபா பெறுமதியான 15 தையல் இயந்திரங்கள், 21,0000 ரூபா பெறுமதியான 14 துவிச்சக்கரவண்டிகள், 20,0000 ரூபா பெறுமதியான கட்டிடப்பொருட்கள் 5 நபர்களுக்கு என மொத்தமாக 40 நபர்களுக்கு 10,38,000 ரூபா பெறுமதியான பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,

புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.இரத்தினசிங்கம் கெங்காதரன்(J.P) அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீதுர்க்கா மற்றும் இராஜஇராஜேஸ்வரி சனசமூக நிலைய உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘ஒன்றுபட்ட சுபீட்சமான அழகிய கிராமத்தை உருவாக்குவோம்’ என்னும் மாபெரும் சிரமதானப்பணி இன்றையதினம் (2018.09.01) இராஜஇராஜேஸ்வரி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள ஞாபகார்த்த பூங்காவில் ஆரம்பமாகி இராஜேஸ்வரி வீதி ஊடாக G.G. பொன்னம்பலம் வீதி வரை நடைபெற்று துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read more

தற்காலிக வாக்காளர் இடாப்பில், தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தற்காலிக வாக்காளர் இடாப்பு, மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களிலும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கை வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 5.5 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்று வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் காலை மடகஸ்கர் தீவுக்கு அருகாமையில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அது 5.5 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாடு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் கடந்த 30ம் திகதி ஆரம்பமானதுடன், நேபாள பிரதமரின் தலைமையில் நேற்று பிற்பகல் மாநாட்டின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more

காணாமல் ஆக்கப்பட்டப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளரும் வவுனியா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான கோபால கிரிஸ்ணன் ராஜ்குமாரை பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி இவ்வாறு முன்னிலையாக வேண்டும் என அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் நினைவு தினத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து குறித்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். Read more

வவுனியாவில் நிலவும் வரட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது, அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையது தான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். Read more